திண்டுக்கல்: திண்டுக்கல், கொடைரோடு அடுத்த ராஜதானிகோட்டை ராமராஜபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(68). இவர் ராமராஜபுரம் அருகே ஏதோ ஒரு காரணத்திற்காக இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மும்பையில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் இரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















