சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அம்மா உணவகத்தை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொறுப்பு மேயர் குணசேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து அம்மா உணவகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு தனது கையாலேயே உணவு பரிமாறி மகிழ்ச்சி அடைந்தார்.
அம்மா உணவகத்தில் இட்லி ஒன்று ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 என்ற மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருவதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















