திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கோவிலூர், செல்லக்குட்டியூரை சேர்ந்த சண்முகம்(45). என்பவரை கான்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















