திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஹில்சன் (20). தர்ஷன் (20). ஜான்சன் (20). வினோத்குமார் (29). சுனில்சூர்யா (21). தளபதி (25). ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















