மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புக் கவசங்கள், கயிறுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் மலை உச்சிக்குச் சென்றுள்ளனர். மேலும், தீபத் தூண் அமைந்துள்ள பகுதியைத் தங்களது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ள தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பான முறையில் நிகழ்வை நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















