மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் இந்து மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் ஒரே பாதையில் பயணித்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்லும் இந்து பக்தர்களும், சிக்கந்தர் தர்காவிற்குச் செல்லும் இஸ்லாமியர்களும் பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இரு மதத்தினரும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியுடனும் பரஸ்பர மரியாதையுடனும் சென்று வழிபட்டுத் திரும்புவது அப்பகுதியில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















