திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில், பழனி வனச்சரகர் கோகுலக்கண்ணன் தலைமையில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மலைச்சாலைகளில் கவனமாக வாகனங்களை இயக்கவும், வனப்பகுதிகளில் செல்ஃபி எடுப்பதற்காக வாகனங்களை நிறுத்தி ஆபத்தில் சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர். யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது எனவும் எச்சரித்தனர். வனத்துறை விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















