சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை மற்றும் மதியம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகராட்சி மேயர் குணசேகரன், சாய் சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், மாநகர இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். மேலும், சிவகங்கை மாவட்ட வர்த்தக அணி தலைவர் ருக்மா சரவணன், சன் சுப்பையா, ராஜேஷ், மணிமுத்து, கார்த்திக், தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















