தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் சுதாகரைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள், எதிர்தரப்பினர் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி வருபவர்களிடம் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வரை முறைகேடாகப் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















