மதுரை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், சமயச்சார்பின்மை மற்றும் மக்களாட்சிக் குடியரசாக உருவாக்குவதையும், அனைத்து குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துவதையும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை வலியுறுத்துகிறது. இந்திய மக்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை போற்றும் நாளாக நவம்பர் 26 கடைப்பிடிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு ச.மூவேந்திரன்




















