திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஜல்லிப்பட்டி பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்த கஸ்தூரி(32). கேரளாவை சேர்ந்த செபாஸ்டின்சனு(38). அபிலேஷ்(27). அபிலேஷ் மனைவி அகிலா(21). ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஒடிசாவில் இருந்து விற்பனைக்காக கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.




















