திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலையில் சக்தி தியேட்டர் எதிர்புறம் அமைந்துள்ள டாஸ்மாக் கடை (எண்: 3396) நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய போலீசாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி. தெய்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















