திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பழைய கிணறு தெருவை சேர்ந்த மணிமாறன் (எ) ராஜா(24) என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்த அதே ஊரை சேர்ந்த சுரேந்தர்(22), முருகன்(54), வீரலட்சுமி(45) ஆகிய 3 பேரை தாண்டிக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில் தாண்டிக்குடி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் முயற்சியால் இன்று சுரேந்தர், முருகன், வீரலட்சுமி ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















