திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, புது தெருவை சேர்ந்த ஜவுளி வியாபாரி கோபால்(71). மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி(65) இவர்கள் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்த நிலையில் கிடந்தனர். தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால் மற்றும் விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















