திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ROTARY CLUB OF DINDIGUL QUEENCITY சார்பில் பெண்களுக்கான சேலை அணிந்து நடைப்போட்டி (Saree Walkathon) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும், பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.



















