மதுரை: மதுரை மாவட்டம் செக்காணூரனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சிவகுமார் (40). நபரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து மொத்தம் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 91760-79100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.




















