மதுரை: மதுரை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியும் இயக்கப்பட்ட வாகனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் (07.07.2026) மாவட்டம் முழுவதும் தீவிர சிறப்பு வாகன சோதனை (Special Drive) மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் இயக்குதல், விதிமுறைகளுக்கு முரணான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துதல் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் வகையில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 96 வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், அவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, தேவையான அசல் ஆவணங்களுடன் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது இதுபோன்ற தீவிர கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















