மதுரை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி புதுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பாலங்களில் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களை முந்திச் செல்ல முயற்சிப்பதால் நேருக்கு நேர் மோதல் உள்ளிட்ட விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து தேவர் பாலம் மற்றும் முத்து பாலம் ஆகியவற்றின் நடுப்பகுதியில் ஒளிரும் தன்மையுடைய சிறிய பிளாஸ்டிக் டிவைடர்கள் (Flexible Delineators) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த டிவைடர்கள் மூலம் எதிர்புற பாதைக்குள் வாகனங்கள் நுழைந்து முந்திச் செல்வதைத் தடுக்க முடிவதால், விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த முயற்சியை வரவேற்று, இது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்ற பாலங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விபத்துகளைத் தடுக்கும் இந்த புதுமையான நடவடிக்கைக்காக போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணியின் செயல்பாடு பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















