தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், புதூர்–சென்னம்பட்டி சாலையில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அமிர்தராஜ் (42). என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 90 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், உதவி ஆய்வாளர் துரைச்சாமி மற்றும் போலீசார், புதூர்–காடல்குடி சாலையில் முருகன் (25). என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 95 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மொத்தமாக 190 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




















