திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலக கூட்டரங்கில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு 26.06.2026 அன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா.சாஸ்திரி, இ.கா.ப., தொடங்கி வைத்தார். திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர், இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., வெளியிட்டுள்ள போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பாடல், இளைஞர்களை அவர்களது மொழியிலும், அவர்களது ரசனைக்கேற்ற பாணியிலும் அணுகி, மனம் திறந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை விதைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம் என காவல்துறை துணை தலைவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து போதைப் பொருள் விழிப்புணர்வு பாடல் அடங்கிய குறுந்தகடை அவர் வெளியிட, ஆட்சியர் ஆனந்த் மோகன் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















