திண்டுக்கல்: திண்டுக்கல், சிறுமலையில் கடந்த 2015-ம் ஆண்டு அடிதடி வழக்கில் சிறுமலை, அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன்(43). என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து மாரியப்பன் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 11 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ், காவலர் ஜெரால்டு ராஜா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமலையில் பதுங்கி இருந்த மாரியப்பனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















