திண்டுக்கல்: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி,குரும்பபட்டியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உதயகுமார்(24). இவரை 2024-ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து உதயகுமார் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக S.P. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் S.P.தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உதயகுமார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர். உதயகுமார் மீது வத்தலகுண்டு, தாடிக்கொம்பு, அம்பாத்துரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















