சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசணி குளம் பகுதியில் கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற ஆதாயக் கொலை தொடர்பாக நெற்குப்பை காவல் நிலைய குற்ற எண் 60/18, பிரிவு U/s 147, 148, 294(b), 324, 302 @ 147, 148, 294(b), 342, 324, 302, 307 r/w 149 IPC ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கின் குற்றவாளிகளான அழகு(63). கண்ணன்(42). பாண்டி முருகன்(38). மகாலட்சுமி(43). லதா(40). ரத்தினம்(62). ஆகியோருக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 6 எதிரிகளுக்கும் தலா 1 ஆயுள் தண்டனை மற்றும் மொத்தம் ரூ. 40000 /- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் முறையான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களையும் சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















