மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு.B.K. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் தலைமையில் (21.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மகளிர் காவல் நிலையத்தில் பெறப்படும் புகார்களை காலதாமதமின்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திடவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.




















