மதுரை : மதுரை மாவட்டம் முழுவதும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கையாக இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயல்படுத்தப்பட்ட காலம்: இத்திட்டம் (20.05.2026) முதல் தொடங்கி, தற்போது மூன்றாம் நாளாக தீவிரமாக அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள்
குற்றவாளிகள் கண்காணிப்பு. 3 நாட்களிலாக மொத்தம் 398 வரலாற்று குற்றவாளிகள் (History Sheeters) சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கைது நடவடிக்கைகள்: பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 08 வழக்கமான குற்றவாளிகள் (Habitual Offenders) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்டநாட்களாக நிலுவையில் இருந்த 28 பிடிவாரண்டுகள் (NBW) நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடுப்பு நடவடிக்கை: 56 நபர்கள் மீது BNSS பிரிவு 126-ன் கீழ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன சோதனைகள். பதிவு எண் பலகை இல்லாமை, அதிவேக/ஆபத்தான ஓட்டம், மின்னும் விளக்குகள் (Flash lights) மற்றும் சட்டவிரோத மாற்றங்கள் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 105 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பு. தொடர் குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்யவும், அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் மதுரை மாவட்ட காவல் நிலையங்கள் மூலம் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















