மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் அதிக மதிப்பெண் பெற்ற வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன் படி 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் மதுரை மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வித் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று (23.05.2026) காவல் அலுவலகத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அரவிந்த் இ.கா.ப ., அவர்கள் வழங்கி மாணவர்களு வாழ்த்து தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதேபோன்று சிறப்பாக கல்வியில் சாதித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கி பாராட்டினார்.




















