கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் கும்ளாபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வெளிமாநில மதுபானங்கள் இருந்தது. மதுபானங்களை கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















