திருநெல்வேலி : திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர், P. வேல்பாண்டியன் (30). இவர் சாலை விபத்து ஒன்றில் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் ப. சரவணன், இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ணகுமார், இ.கா.ப., தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சி. மதன், இ.கா.ப மற்றும் தாழையூத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, மற்றும் காவல் அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன், 24 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















