திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 250 வழங்குகளில் கைப்பற்றப்பட்ட 584.614 கி.கிராம் கஞ்சாவை, சரக காவல் துணைத் தலைவர் முனைவர்.இரா.திருநாவுக்கரசு, இ.கா.ப., தலைமையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்த்ரி, இ.கா.ப., தடய அறிவியல் ஆய்வுத்துறை உதவி இயக்குனர், ஆர்.ஆனந்தி, ஆகியோர் முன்னிலையில், (25.06.2026) அன்று நாங்குநேரி பாப்பான்குளம் கிராமத்தில் அமைந்துள்ள Aseptic Systems BMWM என்ற நிறுவனத்தில் வைத்து அழிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















