திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர், துரை தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருநெல்வேலி சந்திப்பு விளாகம் பகுதியில் ரகுமான் பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த சுடலைமுத்து (32). என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில்
சுமார் 1200 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஓட்டுனரை கைது செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















