திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., (21.06.2026) அன்று இரவு முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் பரிசீலித்து, அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர், முன்னீர்பள்ளம், மேலச்செவல் மற்றும் சுத்தமல்லி காவல் நிலைய பகுதிகளில் காவல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த வாகனத் தணிக்கையினை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன ஓட்டிகளின் ஆவணங்கள் முறையாகச் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்ததுடன், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணும் வகையில் வாகனத் தணிக்கைப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















