கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் மொகதியன் அகமது என்பவர், ஒரு கோசாலையில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், அந்த கோசாலையில் மொத்தம் சுமார் 430 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் கடந்த (16.07.2026) அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் அனைத்து மாடுகளும் இருந்த நிலையில், (17.07.2026) அன்று காலை சுமார் 06.00 மணியளவில் சென்று பார்த்தபோது 4 மாடுகள் காணாமல் போயிருந்தது தொடர்பாக மொகதியன் அகமது அளித்த புகாரின் பேரில், பாகலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாடுகளை திருடிச் சென்ற இரண்டு எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட 4 மாடுகளையும் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்




















