திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி (17.07.2026) அன்று பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி நிகழ்ச்சியில் வள்ளியூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர், மயிலேறும் பெருமாள் கலந்து கொண்டு பேசுகையில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நல பாதிப்புகள், மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குதல், மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் Women’s Helpline – 181 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெண்கள் தயக்கம் இன்றி புகார் அளிக்கவும் கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















