திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் உதவி ஆய்வாளர், ஜனகன் தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோயில் தெரு வழியாக ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றவரைப் பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன்(19). என்பதும், விற்பனைக்காக 50 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போல் திருநெல்வேலி சந்திப்பு காவல் உதவி ஆய்வாளர், அருள்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் சந்திப்பு ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வடமாநில இளைஞர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் விற்பனைக்காக 170 புகையிலைப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது, இதனைய்டுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களான ஷாகிர் அன்சாரி (29). சுசில்முர்மு (22). ஜாகிர் அன்சாரி (22). ஆகியோர் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















