திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “மருந்து சரக்கு குற்றவாளியான” திருநெல்வேலி சந்திப்பு பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் மாரிமுத்து(29). என்பவரை சந்திப்பு காவல் ஆய்வாளரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய், இ.கா.ப., ஆணைப்படி (13.05.2026)- அன்று குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















