திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணபதி (81). இவர் சில மாதங்களுக்கு முன்பு (4). வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், மேல் நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் கணபதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட கணபதிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து (28.07.26) அன்று தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு தண்டனை பெற்றுத்தந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சண்முகம்,(CWC) சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர், அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளர்கள், விஜயலட்சுமி, மங்கையர்கரசி, (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), தலைமை காவலர் துர்கா தேவி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















