திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற நடசேன் (63). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் என்ற நடசேனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரம் என்ற நடசேனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெற கண்காணிப்பு செய்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் M.சண்முகம், (CWC) சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், காவல் ஆய்வாளர்கள், கோகிலா (தற்போது திருநெல்வேலி மாநகரம்_ JAPU) மங்கையர்கரசி, தலைமை காவலர், துர்கா தேவி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















