திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள கீழபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த (17). வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் அவதூறாக பரப்பி உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருநெல்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் குமார் மீது வழக்குப்பதிந்து, கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















