திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த15 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில், முக்கூடல் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்டபோக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து (15.05.26) அன்று தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சண்முகம்(CWC), சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர், அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மங்கையர்கரசி, காவல் ஆய்வாளர், சங்கரேஸ்வரி (தற்போது தென்காசி மாவட்டம்) தலைமை பெண் காவலர், யாஸ்மின் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. வி. பிரசன்னா குமார், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















