தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், G.S. மாதவன் உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(11.02.26) அன்று புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் காவல் ஆய்வாளர், ஷியாம் சுந்தர் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகப்படும் விதமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் குஜராத்தை சேர்ந்த ஜித்து மற்றும் இராஜஸ்தானை சேர்ந்த பீரு சாஹா, கடையநல்லூர் குருசாமி ஆவுடையாள்புரத்தை சேர்ந்த காளிராஜ் ஆகியோர் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்து வழக்கு பதியப்பட்டு அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 297 கிலோ எடைகொண்ட ரூ.1.58 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















