தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார், உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி (21.06.2026) அன்று தென்காசி – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் இருந்த போது சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் பாலசுப்பிரமணியன் (43). என்பவர் ஓட்டி வந்த வாகனத்தில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 510 கிலோ எடை கொண்ட சுமார் 3,60,000 மதிப்புடைய புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல் குற்றாலம் – பழைய குற்றாலம் சாலையில் உள்ள செண்பகாதேவி குளத்தின் கரை அருகே நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த சொர்ணபுரத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் அப்துல் காலித் (22). மற்றும் நாகூர் மீரான் மகன் தௌபிக் (23). ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ (சுமார் ரூ.1,50,000/- மதிப்பு) கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர் .
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















