தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக்குமார் உத்திரவின் படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல்துறையினர் (19.06.2026) அன்று சிவகிரி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அழகுசாமி (21). மலரவன் (20). மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து சுமார் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















