திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த (40). வயது பெண்மணி ஒருவரை சோதனை செய்து பார்த்தபோது புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சிவந்திபட்டி காவல் ஆய்வாளர், ராபர்ட் விசாரணை மேற்கொண்டு அப்பெண்மணியை கைது செய்து, அவரிடமிருந்து 15 கிலோ 138 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















