திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் ரோட்டில் காவல் உதவி ஆய்வாளர், விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ஆலங்குளம், சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சுதர்சன் (41). லட்சுமணன் (47). இருவரும் ஓட்டி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து முக்கூடல் காவல் ஆய்வாளர், சங்கர நாராயணன் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 106 கிலோ புகையிலை பொருட்களையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















