மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில், இன்று (31.07.2026) மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றவாளியான ராம்கணேஷ், 36/26, (SC/PR) த/பெ.ராமன், சந்தைப்பட்டி, வகுரணி, உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம் என்பவர் பாதிக்கப்பட்ட நபரை காதலித்து, திருமணம் செய்து கொள்ளமல், அவரை கர்ப்பமாக்கியதின் விளைவாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில்,மேற்படி குற்றவாளியானவர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால், அவர் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினரால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.5,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தந்து தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















