திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருப்பதாக நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் அச்சிறுமி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடை சேர்ந்தவர் என்பதும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. பின்னர் அவரது பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர். காவல்துறையினரின் விரைவான மற்றும் துரிதமான நடவடிக்கையால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்


















