இராமநாதபுரம் : இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்/அரசு முதன்மை செயலாளர் சத்திய பிரதா சாகு, இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி