திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஸ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினரால் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேரன்மகாதேவியில் அமைந்துள்ள SCAD CBSE பள்ளியில், சிங்கப்பெண் (Singapen) சிறப்புப் அதிரடி படையினர் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு, அந்நியர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது, இணையவழி பாதுகாப்பு மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்ததுடன், அவசர காலங்களில் காவல்துறையின் 1091 மகளிர் உதவி எண் மற்றும் காவல் உதவி (Kaval Uthavi) செயலி மூலம் எவ்வாறு உடனடி உதவி பெறலாம் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















