கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் சுல்தான்பேட்டை கணேஷ் டீ கடையின் அருகில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 12 லாட்டரி சீட்டுகள், ₹1600/- ரூபாய் பணம் மற்றும் சாம்சங் செல்போன் ஒன்று பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















