நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செங்கோடு நந்தவனத் தெரு அருகே, லாரியில் சட்ட விரோதமாக கிரவல் மண் ஏற்றி கடத்தியதாக 1. நடராஜன் (58). 2. விஜய் (30). ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.




















